ராம கிருஷ்ண மகா வித்தியாலயம்

மேலதிக வகுப்பு நேர அட்டவணை

page-header-1900x320.jpeg
page-header-1900x320.jpeg
விபுலானந்த மணிமண்டப திறப்பு விழா!விபுலானந்த மணிமண்டப திறப்பு விழா!

விபுலானந்த மணிமண்டப திறப்பு விழா!விபுலானந்த மணிமண்டப திறப்பு விழா!

கல்முனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட விபுலானந்தா மணி மண்டபம் இன்று (11) புதன்கிழமை காலை அதிபர் திருமதி விஜயசாந்தினி நந்தபால தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

விபுலானந்தா மணிமண்டபம் கடந்த சில மாதங்களாக சிதிலமடைந்த நிலையில் லண்டனில் வசிக்கும் பாண்டிருப்பைச் சேர்ந்த திருமதி வனிதா இராஜகுமார் அவர்கள் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன் ராஜனின் வேண்டுகோளுக்கு இணங்க சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் மணிமண்டபத்தை புனரமைத்துள்ளார்.

இன்று (11ஆம் திகதி) புதன்கிழமை கல்முனை பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் முன்னிலையில் அவரது தாயார் திருமதி பாக்யம் கதிரமலை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.