மாறுபடும் கால ஓட்டத்திற்கு ஏற்ப மக்கள் மாறிக் கொண்டிருந்தாலும் முன்னைய காலத்தில் சிறப்பியல்புகளை அவர்களுக்கு பறைசாற்றி நிற்பது அவை பற்றியே வரலாறே என்பது கண்கூடு. சிலந்தியின் வலைக்கே வரலாறு தேடிக்கொண்டிருக்கும் மனித சமுதாயத்திற்கு ஒரு பாடசாலையின் வரலாறு எவ்வளவு அவசியம் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
வுhய் மொழி வழியாக வரலாறு கூறப்பட்டு வந்தாலும் எழுத்து வடிவத்திற்கே நம்பிக்கை அதிகம். அந்;த வகையில் 1936ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கல்முனை இராமகிருஸ்ணமிஷனின் மகா வித்தியாலயத்தின் வரலாற்;றினை மூன்று தசாப்தங்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு முன் ஏற்பட்ட சூறாவளி சுவடின்றி அழித்து சென்றாலும் இடையே பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு வரையப்பட்டதே இவ் வரலாற்றாகும்.
செல்வ செழிப்பும் மிக்க அம்பாரை மாவட்டத்தில் கல்விp முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெயர் போன கல்முனை நகரத்திpல் அமைந்துள்ளது கல்முனை இராமகிருஸ்ணமிஷனின் பாடசாலையாகும். கல்முனையின் பாடசாலைகளின் வரலாற்றிலே இது ஆறாவதாகவும் முதல் இந்து பாடசாலையாகவும் உருவாகியுள்ளது இது ஒரு மிஷனெறிப் பாடசாலையாவே ஆரம்பிக்கப்பட்டது.
இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் முக்கிய காரணம் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்ட காலத்தில் சுதேசிகளின் கல்வி நிலை பரிதாபத்துக்குரியதாக காணப்பட்டது. கல்வி பொதுவுடமையாக இருந்தாலும் சிலரது மனோநிலையால் தனியுடமையாக மாற்றப்பட்டுக்கொண்டிருந்தது. ஆங்காங்கே இருந்த ஒரு சிலரே கல்வி பயிலும் பாக்கியத்தைப் பெற்றிருந்தனர்.
அந்த வகையில் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்துடையவர்களின் பிள்ளைகளும் கிறிஸ்தவ மதத்தை தழுவியவர்களின் பிள்ளைகளுமே கல்வி கற்று உயர் பதவிகளை வகித்தனர். இதனால் கல்வித்தாகம் தணியாமல் இருந்த போதும் சமுதாயத்தில் கீழ் மட்டத்தில் வாழ்ந்தவர்களுக்கும் கிறிஸ்தவ மதத்தை தழுவ ஈடுபாடு இல்லாதவர்களுக்கும் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது.
இதன் காரணமாக இலங்கையில் வாழ்ந்த ஏனைய சமூகங்கள் புறக்கணிக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கிழக்கிலங்கை மக்கள் இதனை அனுபவிக்கத் தவறவிலிலை. நுடப்பாண்டின் ஆசியாக்கண்டத்தில் எழுத்தறிவு வீதத்தில் முன்னிலையில் இருக்கும் ஆழி சூழ் அழகுத் திருநாட்டில் இத்தகையோர் நிகழ்வு சோகவரலாறாகும்.
இந்நிலையில் கிழக்குப் பிரதேசமானது கல்வி இ பொருளாதாரம் இ சமுக முன்னேற்றம் என்பவற்றில் அடி மட்டத்திலேயே காணப்பட்டது. புத்திசாலிகள் குறைவாகவும் வழிநடத்துவோர் அரிதாகவும் காணப்பட்டனர். இது இவ்வாறு இருக்கும் போது 20ம் ; நூற்றாண்டின் ஆரம்ப காலம் ஆங்கில ஆட்;சியின் உச்சகட்ட காலமாகும். அப்போது நம் நாட்டில் உள்ள உயர்கல்வி நிலையங்கள் இ மேல்நாட்டு சமய போதனைகளின் நிர்வாகத்தின் கீழ் அதாவது கிறிஸ்தவ மிஷனறிகளின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்தது. ஆங்கிலக் கல்;விக்கும் மேலநாட்டு சமய கலாசாரத்திற்கும் முக்கியகத்துவம் கொடுக்கப்பட்டது. சுதேச சமய பண்பாடடு அம்சங்கள் இழிந்தவை என்னும் கருதும் நிலை காணப்பட்டது. ஆங்கிலம் கற்ற இளைஞர் கூட்டம் பட்டம் பதவிகளுக்காக மதத்தை மாற்றிக் கொள்ளும் நிலை உருவாகியது. இக்கால கட்டத்தில் இராமகிருஷ்ண சங்கத்தினூடாக சுவாமி விபுலானந்தரின் கல்விப் பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இலங்கையின் பல பாகங்களில் குறிப்பாக கிழங்கிலங்கையில் சுவாமி விபுலானந்தனரின் அரிய முயற்சியினால் இராமகிருஷ்ன மிஷன் பாடசாலைகள் பல உருவாகின. வட இலங்கையில் ஆறுமுக நாவலரின் சைவப் பணியினால் சைவமும் தமிழும் தழைத்தோங்கியது போல் கிழக்கிலங்கையிலேயே சுவாமி விபுலானந்தரின் கல்விப்பணி பரந்து பட்டுச் சென்றது. ஆந்த வகையில் யாழ்ப்பாணம் வைத்Pஸ்வர வித்தியாலம் திருகோணமலை இந்துக்கல்லூரி கல்லடி உப்படையில் உள்ள சிவானந்தா வித்தியாலம் காரைதீவு மண்டுர் சித்தாண்டி மட்டக்களப்பு ஆணைப்பந்தி கொக்கட்டிச்சோலை முதலிய இடங்களில் பல்வேறு பாடசாலைகளை அமைத்தனர். இவ்Nளையில் கல்முனைப் பிரதேச மக்களும் ஊர்ப்பிரமுகர்களும் சைவ மகா சபை அங்கத்தவர்களான
01 திரு. முத்தையா ( தொழில் நுட்ப அதிகார ) நீPர்ப்பாசன இலாகா
02 திரு. சீனித்தம்பி ( வட்ட விதானை )
03 திரு. இளைய தம்பி வைத்ததியர் ( கோயில் நிர்வாகி )
04 திரு. சிவஞானம் ( ஆசிரியர் )
05 திரு. குமார சாமி ( ஆசிரியர் )
ஆகியோர்களுடன் இணைந்து கல்முனையிலும் ஓர் பாடசாலையை உருவாக்கஞ்ரும் முத்தமிழ் வித்தகரும் சிந்தனையாளருமாகிய சுவாமி விபுலானந்தரிடம் கோரிக்கையை விடுத்து தனது அவாவை நிறைவேற்றிக் கொண்டார்.
ஆந்த வகையில் சைவ மாக சபையால் பராமரிக்கப்பட்டு வந்த இராமகிருஷ்ன மடம் பாடசாலையாக மாற்றப்பட்டது. இதற்குறிய மேலதிக நிலத்தை நெல்லையா வன்னியார் நன்கொடையாக வழங்கினார். இவ்வாறு 1936ம் ஆண்டு 07 மாணவர்களைக் கொண்டு 80 20 பரப்புடைய இராமகிருஷ்ண மிஷன் மட கட்டிடத்திலும் ஓலைக் குடிசை ஒன்றிலும் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
இப்பாடசாலையின் வித்தியாரம்ப நிகழ்ச்சியில் அரசாங்க சபையின் சபாநாயகராக விளங்கிய சேர் வைத்தியலிங்கம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியானது கல்முனை வரலாற்றில் முக்கிய நிகழ்ச்சியாக கருதபடுகிறது. இவ்விழாவிற்கு மட்டகளப்பு மாவட்ட நீதிபதி திரு. ஐவத்திலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினர். இவ்விழாவுக்கு இஇராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி விபுலானந்த அடிகள் சமூகமளித்தமை குறிப்பிடதக்கதாகும் மட்டகளப்பு மாவட்ட பெரும்பாக வித்தியாதரிசி திரு. சி.சதாசிவம் ஐயர் பண்டிதர். ர. பெரிய தம்பிள்ளை போன்றோர்கள் சிறப்புறை வழங்கினார்கள். திருமதி. சுந்தனப்பிள்ளை சின்னத்தம்பி அவர்களால் வரவேற்பு பாடல் பாடப்பட்டது. இவ்வைபவத்தின் போது சேர். வைத்தியலிங்கம் துரைசாமி அவர்களுக்கு வாசித்து அளிக்கப்பட்ட வரவேற்புப் பாடலின் இரண்டு அடிகள் வருமாறு.
“ இலங்கைப் பெறுமகனே வரும் -- எங்கள்
ஏந்தள் துரைச்சாமி வருக
களஙகமில்லா மனத்தோடு வருக் -- தமிழ்
கல்வி தழைத்திடவே வருக’’
‘‘நல்லவர்கள் எல்லோரும் வருக – நமது
நாடு செழித்திடவே வருக
செல்வர்களும் ஏழைகளும் வருக – கலைச்
செல்வம் இங்கு சேர்த்திடுவோம் வருக’’ என்ற பாடலாகும்.
இவ்வித்தியாலத்தின் முதல் தலைமை ஆசிரியர் பழுகாமத்தைச் சேர்ந்த திரு. வேலுப்பிள்ளை உடையார் மயில்வாகனம் ஆவார். இவரிடம் திரு குமார சுவாமி ஆசிரியரும் திருமதி சந்தனப்பிள்ளை சீனித்தம்பி ஆசிரியையும் ஆசிரியர்களாக கடமையாற்றினர்.
இப்பாடசாலை 1960ம் ஆண்டு தேசிய மயமாக்கப்படும் வரை மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷனின் நிருவாகத்தின் கீழ் இயங்கி வந்தது. இப்பாடசாலையின் ஓலைக்குடிசையின் 01ம்இ 02ம்; தரவகுப்புகளும் கட்டடத்தின் 03ம் 04ம் 05ம் தரவகுப்புகளும் ஒரு பகுதியில் தளபாடங்களும் வைக்கப்படடிருந்தன. இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதும் னெ;மேரிஸ் வெஸ்லிமெதடிஸ்தமிசன் போன்ற அண்டையிலுள்ள கிறிஸ்தவ பாடசாலைகளில் கல்வி கற்ற சைவ சமயத்தை சேர்ந்த மாணவர்கள் வந்து சேர்தனர் அத்தோடு இன மத பேதமில்லாமல் தமிழ் மாணவர்களுடன் இளணந்து முஸ்லிம் மாணவர்களும் கல்வி கற்றனர். இப்பாடநாலை ஆரம்பிக்கபட்ட பிற்பாடு 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து சேர்ந்தார்கள். இது 01ம் தரம் தொடக்கம் 05ம் தரம் வரை நடை பெறும் ஆரம்ப பாடசாலையாக இருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்து 1940ம் ஆண்டு பொதுத்தராதர உயர் தரவகுப்புள்ள ஒரு மகாவித்தியாலயமாக 1உ பாடசாலையாக விளங்குகின்றது.
1948 இல் கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தரம் முகாமையாளர் சுவாமி விபுலானந்தரின் அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது 1942ம் ஆண்டு 06ம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு அவ்வகுப்பிலிருந்து படிப்படியாக 10ம் வகுப்பு வரை உயர்துள்ளது. இவ்வாண்டு சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்டாலும் மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் அதிபராகிய திரு.N. நாகராஜா அவர்களினதும் இப்பாடசாலையின் ஆசிரியர்களினதும் முயற்சியினால் அரசாங்கத்தின் அனுமதியுடன் 1993 இல் கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர வகுப்பு ஆரம்பிக்கபட்டமை இங்கு குறிப்பிடதக்கது.
முதல் 07 மாணவர்களும் பிற்பாடு 14 மாணவர்களுமாக ஆரம்பிக்கப்பட்ட கலைப்பிரிவு அதிபரினதும் இ ஆசியர்களினதும் அயராத முயற்சியினாலும்இ அளப்பரிய சேவையினாலும் மேலும் மாணவர்களினது ஆர்வம் காரணமாகவும் சிறந்த பெறுபேற்;றைப் பெற்றதனால் அடுத்த முறை அதிக மாணவர்கள் வந்து சேர்ந்தனர். இதனை அடுத்து 04 மாதங்களுக்கு பின் முஸ்லிம் மாணவர்கள் உட்பட 06 மாணவர்களை கொண்டு வர்த்தக பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.
1995ம் ஆண்டு கலைப்பிரிவில் மாவட்ட ரீதியாக 02ம் 05ம் 07ம் நிலைகளை இப்பாடசாலை மாணவர்கள் பெற்றுக் கொண்டதாலும் இம்மாணவர்களினால் 07 பேர் பல்கலைக்கழகத்துக்கும் 04பேர் கல்வியியல் கல்லூரிக்கும் தெரிவானதை அடுத்து இப்பாடசாலையில் உயர்தரம் கற்பதற்கு மேலும் 68மாணவர்கள் வந்து சேர்ந்தனர். இவர்கள் பெரும்பாலும் துறைநீலாவணை மல்வத்த சொறிக்கல்முனை சேனைக்குடியிருப்பு காரைதீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
இப்பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய திரு. N. நாகராஜா அவர்கள் திறமையிருந்து சூழ்நிலை காரணமாக சிறப்பான கற்பித்தலை மேற்கொள்ள முடியாத ஆசிரியர்களுக்கு அவர்கள் திருப்தியுறும் வகையில் சலுகைகளை வழங்கி அதன் மூலம் உச்சபயனை பெற்றுக் கொண்டது அவரது சாமர்த்தியமாகும். இதன் காரணமாக கலைப்பிரிவில் மிகச் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்று இப்பாடசாலையின் அயற் பாடசாலைகளான பெற்றிமா வெஸ்லி என்பவற்றையும் தாண்டி மக்;கள் இப்பாடசாலையின் மீது தங்கள் பார்வையை செலுத்தத் தொடங்கினர்.
1945இல் இப்பாடசாலையின் கட்டிடங்களை விஸ்தரிக்கும் நோக்கத்தோடு ஊர் பிரமுகர்கள் கோயில் நிர்வாகத்துடன் இணைந்து அன்பளிப்புப் பெரும் நோக்கோடு எண்ணெய் சிந்து பணம் பாடி அறவிட்டு 125 ஒ 25 பரப்பளவைக் கொண்ட மண்டபத்தைக் கட்டினர். இம்மண்டபத்திற்கு பாரதி மண்டபம் என பெயர் சூட்டப்பட்டது.இம் மண்டபம் பிரத்தணைக் கூடமாகவும் வகுப்பறையாகவும்; பயன்படுத்தப்பட்டது. 1987ம் ஆண்டு இப் பாடசாலையின் முழுப் பொறுப்பையும் இராம கிருஸ்ண மிஷன் சபையிடம் இருந்து அரசாங்கம் கையேற்றுத.
1978இல் ஏற்பட்ட சூறாவளியினாலும் வெள்ளத்தினாலும் இப் பாடசாலையின் கட்டிடங்கள் அனைத்தும் சேதமாக்கப்பட்டது.அத்தோடு இப் பாடசாலையின் நூலகத்திலிருந்து முக்கிய தமிழ் நூல் எல்லாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.பின்னர் அப்போதைய பிரேதச பாரளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர் மன்சூர் அவர்களின் உதவியால் மீண்டும் கட்;;;;;;;;டிடமொன்று பாடசாலைக்கு வடக்குப்பக்க வீதியோரமாகக் கட்டப்பட்டது.இதற்கு சுவாமி விபுலானந்தரின் பெயர் சூட்டப்பட்டது.இதனை முன்னால் இந்து கலாச்சார அமைச்சராக இருந்த பீ.பீ.தேவராஜ் அவர்கள் திறந்து வைத்தவர்கள்.
1997ம் ஆண்டு இப்பாடசாலை 970 மாணவர்;களையும் 45 ஆசிரியர்களையும் உள்வாங்கி இருந்தது. இதுவே இப்பாடசாலை வரலாற்றில் மாணவர்களின் உச்சதொகையாகும். இக் காலகட்டத்தில் பாடசாலையில் சுற்றிவர மதில்கள்; அமைக்கப்பட்டதோடுஇ இவ்வண்டியிலே விஞ்ஞான ஆய்வு கூடமும் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சங்கீத அறைஇ மனையியல் அறை கட்டபட்டமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும் 2005 இல் கணணி வசதி ஏற்படுத்தப்பட்டதுடன் யுனிஸெப் இன் உதவியுடன் மலசல கூடமும் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இக்காலகட்டத்தில் கட்டடத்தில் மாகாணசபையின் உதவியுடன் பாடசாலையின் நுழைவாயின் வலப்புறமாகக் காணப்படும் 3 மாடிக் கட்டிடத்தினை கட்டுவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுத. இக் கட்டிடம் 2005ம் ஆண்டு கட்டி முடிக்கபட்டது. இதே வருடத்தில் இப்பாடசாலை அதிபராக கடமை ஆற்றிய திரு.என்.நாகராஜா அவர்களுக்கு அகில இலங்கை ரீதியாக சிறந்த அதிபருக்கான விருது வழங்கி கௌரகவிக்கபட்டது. எடுத்துக்காட்டப்பட வேண்டிய நிகழ்வாகும்.
இப்பாடசாலைக்கு 2006.04.19 இல் திருமதி ஏ.பேரின்பராஜா அதிபராக கடமையேற்றதன் பிற்பாடு 2007.03.15 இல் அக்கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இவ் விழாவில் மேலதிக வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ளு.மு.ஆனந்தராஜா பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி.மு.தயாசீலன் மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பழைய மாணவர்கள் போன்றோர் பங்கு பற்றினர்.
இதன் பிற்பாடு 2006ம் ஆண்டு திருமதி.யு.பேரின்பராஜா அவர்கள் அதிபராக கடமையேற்ற பிறகும் இப் பாடசாலை தனது நிலையிலிருந்து எவ்வாறான வகையிலும் குறைவு படாமல் முன்னேற்றகரமாகக் காணப்படுகின்றது. 2006 இல் “ளூiஎய ஊhயசவைல – ளழனெ” எனும் நிறுவனத்தினால் ஆரம்பப் பாடசாலை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது. பாடசாலையுடன் சேர்ந்து இயங்கிய இந் நிறுவனம் பிற்காலத்தில் செயலிழக்க இக்கட்டிடம் பாடசாலை தேவைக்காக பயன்படுத்தப்படுகிறது.
இப் பாடசாலை ஆரம்ப காலத்தில் அதிகமான மாணவர்களைக் கொண்டிருந்தாலும் பிற்காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் தொகை குறைந்து சென்றாலும் கல்வியில் மாணவர்களின் நிலை அதிகரித்துச் சென்றமை முக்கிய அம்சமாகும்.
மேலும் பெற்றார் ஆசிரியர் சங்கம்இ பழைய மாணவர்கள் சங்கம் என்பன அன்றிலிருந்து இன்று வரை இயங்கி வருகின்றது. வருடா வருடம் பெற்றார் ஆசிரியர் சங்க விழாஇ சரஸ்வதி பூசைஇ விளையாட்டு விழாஇ பரிசளிப்பு விழாஇ ஒளிவிழா போன்ற விஷேட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. 1997.12.05ம் திகதி பாடசாலையில் திரு. N. நாகராஜா அவர்களின் பெரு முயற்சியினால் இயேசு உதய விழா முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது.
இப்பாடசாலையானது கல்முனை எனும் நகரில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு மக்கள் மனதில் என்றும் நினைவுபடுத்தக் கூடிய ஒரு சிறந்த பாடசாலையாக அமைந்துள்ளது. என்பதில் எவ்வித ஐயமுமில்லை.





